See a Problem?
Thanks for telling us about the problem.
Friend Reviews
Community Reviews
பின்பு ஓம் சரவண பவ என்ற முககுழாய் சண்ணலின் வாயிலாக அவரது ஜோதிட அனுபவங்களை பார்க்கும் போது தான் இந்த புத்தகத்தை பற்றி தெரிந்து கொண்டேன். இவரின் மூலம் ஜோதிடர் முருகேசன் அவர்களின் அறிமுகமும் கிட்டியது.
இந்த புத்தகத்தை வாசிக்கும் தருவாயில் ஜோதிடம் மீதான எனது நாட்டம் இன்னும் வீரியம் அடைந்தது என்றே சொல்லலாம்.
இந்த கட்டுரை தொகுப்பு, ராஜேஷ் தன் வாழ்க்கையில் இது வரை சந்தித்த
நீயா நானா என்ற ஒரு நிகழ்ச்சியில் ராஜேஷ் அவர்கள் ஒரு திரைப்பட பாடலைப்பற்றி விளக்கும் போது, அவரின் அறிவுக்கான தேடலை கண்டு வியந்தேன்.பின்பு ஓம் சரவண பவ என்ற முககுழாய் சண்ணலின் வாயிலாக அவரது ஜோதிட அனுபவங்களை பார்க்கும் போது தான் இந்த புத்தகத்தை பற்றி தெரிந்து கொண்டேன். இவரின் மூலம் ஜோதிடர் முருகேசன் அவர்களின் அறிமுகமும் கிட்டியது.
இந்த புத்தகத்தை வாசிக்கும் தருவாயில் ஜோதிடம் மீதான எனது நாட்டம் இன்னும் வீரியம் அடைந்தது என்றே சொல்லலாம்.
இந்த கட்டுரை தொகுப்பு, ராஜேஷ் தன் வாழ்க்கையில் இது வரை சந்தித்த ஜோதிட அனுபவங்களை தொகுத்து இருக்கிறார். அதை வாசிக்க்கும் போதே ஜோதிடம் என்பது நம்பிக்கை என்ற அமைப்பிற்குள் வைத்து காண்கின்ற மனோ பாவம் மாறிவிடும். கண்ணதாசன் முதலில் ஆத்தீகராக இருந்து பின்பு நாத்திகனாக மாறி மீண்டும் ஆத்தீகத்திற்கு மாறிய கதையை கேட்ட போது அவர் எழுதிய அர்த்தமுள்ள இந்துமதம் என்ற புத்தகத்தை எப்படி என்னை வாசிக்க தூண்டியதோ, ராஜேஷ் கம்யூனிச சிந்தனைகளை விரும்பும் ஒரு கிருத்துவ மதத்தை கடைபிடித்து வாழும் ஒரு நபராக இருந்தும் , ஜோதிடத்தை ஒரு மதத்திற்குள் அடைக்காமல் அதை ஒரு திறந்த மனதோடு அணுகியிருப்பது தான் என்னை இந்த புத்தகம் வாசிக்க தூண்டியது. நமது தொகுக்கக்கப்படாத இந்த அறிவியல் சார்ந்த கணிதத்தை நாம் பேணி காக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
கற்பனைக் கதாபாத்திரங்கள் கொண்டு ஒரு ஜோதிடக் கதையை வாசித்தாலே தொய்வில்லாமல் இருக்கும், ஆனால் இவர் கதை வடிவிலான சொல்கிற கதைகள் அத்தனையும் உண்மை என்ற போது மிகவும் ஆசிரியமாகத் தான் இருக்கிறது.
ஒரு வேளை இந்த புத்தகம் வரை என்னை சேர்த்ததில் என் ஜாதக அமைப்பு முக்கிய பங்கு வகித்து இருக்கலாம். விதி தான் எல்லாவற்றிற்கும் காரணம்.
இவர் குறுட்டாம் போக்கில் நடந்ததை கூறாமல் சில நிகழ்வுகள் நடந்ததை சற்று பின்னோக்கிப் பார்த்து இவரை உந்தும் பல கேள்விகளுக்கு விடை தேடிக்கொண்டு தான் இருக்கிறார், அது தான் இவரது பகுத்தறிவுக்கு இருக்கும் சக்தி. தேடலின் வாயிலாகத் தான் நாம் உண்மைகளை கண்டறிய முடியும்.
நடிகர் ராஜேஷ் அவர்கள் இதோடு விட்டு விடாமல் தன் மற்ற ஆய்வுகளையும் ஒரு தொகுப்பாக வெளியிட வேண்டும்..
நன்றி
அன்பு
தாம்பரத்தில் நாடி ஜோதிட நிலையம் தொடங்கப்பட்ட பொழுது இவர்தான் சிறப்பு விருந்தினராக வந்து திறந்து வைத்துள்ளார். இதை படித்தவுடன், சுமார் 8 வருடங்களுக்கு முன்பு நான் சென்ற அனுபவம
எனது தந்தைக்கு ஜாதகத்தில் நாட்டம் அதிகம். சென்னை புத்தக கண்காட்சியில் அவருக்காக இந்த புத்தகத்தை வாங்கினேன். நடிகர் ராஜேஷ் தனது சொந்த அனுபவங்களை கூறி பின் அதில் உள்ள சந்தேகங்களையும் எதிர் கேள்விகளையும் எடுத்து வைக்கிறார். உதாரணமாக, எப்பொழுது தர்மம் அழிகிறதோ அப்பொழுது கிருஷ்ண பரமாத்மா அவதரிப்பார். இப்பொழுது ஏன் அவதரிக்கவில்லை?தாம்பரத்தில் நாடி ஜோதிட நிலையம் தொடங்கப்பட்ட பொழுது இவர்தான் சிறப்பு விருந்தினராக வந்து திறந்து வைத்துள்ளார். இதை படித்தவுடன், சுமார் 8 வருடங்களுக்கு முன்பு நான் சென்ற அனுபவம் ஞாபகத்திற்கு வந்தது. எனது பெயர் நாடியில் உள்ளதா என்று தெரிந்து கொள்ள சென்றேன். எனது பெயர் வந்தவுடன் சந்தோஷமாக இருந்தது. சிறிது நேரம் யோசித்த பிறகு, நாடி பார்ப்பவர் என்னிடம் கேட்ட பல கேள்விகள் மூலம் கண்டு பிடித்துள்ளார் என்று அறிந்து கொன்டேன். ரூ. 500ம் ஒரு முழு நாளும் விரயம். ஆனால் நடிகர் ராஜேஷிற்கு தனது இயற்பெயரான சாமுவேல் ராஜேஷ் என்று நாடியில் வந்தது ஆச்சரியமாக உள்ளது. கிறித்துவர்கள் மூட நம்பிக்கைகளை வெறுப்பர். இவர் எப்படி ஜோதிடம் பற்றி 1983இல் இருந்து ஆராய்ந்துள்ளார்?
எனது கல்லூரி நண்பனும் நாடி பார்க்க சென்றான். அவன் வேலை நிமித்தமாக வெளி நாட்டிற்கு செல்வான் என்று வந்தது. அவனும் என்னை போல் ஏமாந்ததாக எண்ணினான். இப்பொழுது அவன் வெளிநாட்டில் இருக்கிறான்!!!
கிருஷ்ணர் கோடி சுற்றி பிறந்ததால் கம்சன் அழிந்தான் என்ற கருத்து சற்று வியப்பாக உள்ளது.
ராக்கியாக் கவுண்டர் என்பவர் பஞ்சமாசித்தி பெற்றவர். அவர் இறக்கும் போது வயது 33. அவர் கூறிய கணிப்பு:
எனக்கு பிறக்க போவது ஒரு ஆண் குழந்தை. அவன் பிறந்த ஒரு வருடத்திற்குள் இறந்து விடுவேன். அப்படி நான் இறக்கவில்லை என்றால், அவன் எனக்கு பிறந்தவனில்லை. அவர் கணித்த மாதிரி தனது மகன் பிறந்த 10வது மாதத்தில் மரணமடைந்தார்.ராக்கியாக் கவுண்டர் நடிகர் சிவகுமாரின் தந்தை.
செட்டிநாட்டு வழக்கப்படி வேறு சாதியில் திருமணம் செய்தால் சாதிக்கட்டுப்பாடு விதித்து விலக்கி வைத்து விடுவார்களாம். ரோபோ சங்கர் வேறு வகுப்பைச் சார்ந்த பெண்ணை காதல் திருமணம் செய்ததால் தனது தாயின் ஈமக்கிரியையில் கலந்து கொள்ள முடியவில்லை. இந்த சம்பவமும் ஜாதகத்தின் மூலம் கணித்துள்ளனர்.
தனது சிறு வயது போட்டோவில், கையில் ஒரு புத்தகத்துடன் போஸ் கொடுத்துள்ளார். இப்பொழுதும் தனது கையில் ஏதோ ஒரு புத்தகம் இருக்குமாம்.
இந்த புத்தகத்தை படித்தவுடன் மறுபடியும் நாடி பார்க்க வேண்டும் என்று எண்ணம் வந்துவிட்டது.
...moreNews & Interviews
Welcome back. Just a moment while we sign you in to your Goodreads account.
Posted by: shaundahollane0198255.blogspot.com
Source: https://www.goodreads.com/book/show/35009343